செல்போனை திருடியவர் கைது

பூதலூர் ரெயில் நிலைய‌ இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் செல்போனை திருடியவர் கைது செய்யபபட்டார்.;

Update: 2022-12-19 20:16 GMT

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வேலை செய்து வருபவர் செல்வராஜ் (வயது36). இவர் தனது செல்போனை அங்கு சார்ஜ் போட்டு வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னையம்பட்டியை சேர்ந்த கிறிஸ்துதாஸ்அமுதன்(50) என்பவர் இந்த செல்போனை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்போனை கிறிஸ்துதாஸ் அமுதன் திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்