மீனவர்களுக்கான ஆன்ட்ராய்டு மொபைல் செயலி

கடல்பசுக்களை பாதுகாக்க மீனவர்களுக்கான ஆன்ட்ராய்டு மொபைல் செயலியை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-29 15:02 GMT

ராமநாதபுரம், 

கடல்பசுக்களை பாதுகாக்க மீனவர்களுக்கான ஆன்ட்ராய்டு மொபைல் செயலியை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தொடங்கி வைத்தார்.

திட்டப்பணி

ராமநாதபுரத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு திட்டப் பணிகளை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தொடங்கி வைத்தார்.

அதன்படி ராமநாதபுரத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகமான ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சார்பில் சமுக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப் பட்ட வன உயிரினகாப்பாளர் அலுவலக கட்டிடம், தெற்கூர் கிராமத்தில் ரூ.32.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்ட சமுதாய கூடம் ஆகிய வற்றை கலெக்டர் சங்கர்லால் குமாவத் திறந்து வைத்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் சுந்தரமுடையான் மற்றும் நாகாச்சி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி தோட்டக்கலை பண்ணையின் பயன் பாட்டிற்காக புதிதாக வாங்கப்பட்ட வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

செயலி

உச்சிப்புளி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஆர்.எஸ். மங்கலம் மற்றும் தொண்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.15 லட்சத்தில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை ஓ.என்.ஜி.சி. நிறுவன அலுவலர்கள், கலெக்டரிடம் வழங்கினர்.

முன்னதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவல கத்தில் கடல் பசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக வனத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் போன்களுக்கான காம்பா என்ற ஆன்ட்ராய்டு செயலி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு உள்ள கடல் பசுவினை பாதுகாக்க 'சேவ் டுகோங்' என்ற ஆன்ட்ராய்டு செயலியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஒத்துழைப்பு

இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி மீனவர்கள் வலையில் மாட்டிய கடல் பசுக்களை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விடும் காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கலாம். அவ்வாறு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் பசுக்களை பாதுகாக்க வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக தக்க சன்மானம் மற்றும் பரிசுத்தொகை பெறலாம்.

இந்த மொபைல் செயலியின் மூலம் மீனவர்கள் எளிமையாக விண்ணப்பித்து தக்க சன்மானம் பெற்றுக்கொள்ளலாம். கடல் பசுக்களை பாதுகாக்க மீனவர்களின் பங்களிப்பும், ஒத்து ழைப்பும் பெறுவதற்கு இந்த மொபைல் செயலி பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், உதவி வன பாதுகாவலர் சுரேஷ், சுகாதார துணை இயக்குனர் பிரதாப், ஓ.என்.ஜி.சி. நிறுவன அலுவலர்கள் யாதவா, அனுராக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்