வளர்ச்சி திட்ட பணிகளை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு

Update: 2022-10-25 18:45 GMT

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கம் மதுரா கொசப்பாளையம் அருகே ஒரத்துார்-லட்சுமிபுரம் சாலையின் குறுக்கே நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், ஒன்றிய அதிகாரிகளிடம் பாலம் கட்டும் பணியை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து ஒரத்தூர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட புகழேந்தி எம்.எல்.ஏ. அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைசெயல்பாடுகள் குறித்து கேட்டறிந்ததோடு, விற்பனையாளரிடம் பொருட்கள் இருப்பு விவரங்களையும் கேட்டார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அனிதா, சாலை ஆய்வாளர் அருள் மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், ஒன்றியபொறியாளர்கள் இளையராஜா, கருணாகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய தலைவர் முரளி, கண்காணிப்பு குழு எத்திராசன், சுதாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளையும் புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்