காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சேலத்தில் விமானப்படை வீரர்கள் தீவிர பயிற்சி

ஹெலிக்காப்டர் மூலம் தீவிரவாத கும்பலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.;

Update:2025-04-23 20:05 IST

சேலம்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக இந்திய விமானப்படை வீரர்கள் தமிழகத்தின் பல இடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் சேலத்தில் இன்று விமானப்படையினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 3 ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள், 30 பேர் கொண்ட குழுவினர் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த பயிற்சியில் ஹெலிக்காப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்துவதும், தீவிரவாத கும்பலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது குறித்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்