தென்மாவட்டங்களில் கனமழை: கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...!

தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

Update: 2023-12-18 08:02 GMT

சென்னை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனிடையே, கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தென்மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மழை, வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்