பஸ்சில் தவறவிட்ட நகை, பணம் ஒப்படைப்பு

பஸ்சில் தவறவிட்ட நகை, பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-04-27 17:41 GMT

செங்கம்

செங்கம் அருகே மண்மலையை சேர்ந்த நிஜத்தன் என்ற வாலிபர் சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து நிஜத்தன் அரசு பஸ்சில் செங்கம் வந்தார்.

அதே பஸ்சில் சென்னை புழல் பகுதியை சேர்ந்த மணி - விஜயலட்சுமி தம்பதியினர் வந்தனர். விஜயலட்சுமி தான் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை தனது கைப்பையில் வைத்திருந்தார்.

அவர்கள் தனது கைப்பையை பஸ்சிலேயே மறந்து வைத்துவிட்டு செஞ்சியில் இறங்கினர்.

வீட்டிற்கு சென்றதும் விஜயலட்சுமி கைப்பையை பஸ்சிலேயே மறந்து வைத்து விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை போக்குவரத்து பணிமனையில் விசாரித்தபோதும் கைப்பை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பஸ்சில் வந்த நிஜத்தன் விஜயலட்சுமி தவறவிட்ட கைப்பையை எடுத்து வந்து செங்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, 4 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் இருந்த கைப்பையை, தவறவிட்ட தம்பதியை வரவழைத்து போலீசார் ஒப்படைத்தனர்.

பஸ்சில் தவறவிட்ட கைப்பையை நேர்மையாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த நிஜத்தனை போலீசார் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்