நாமக்கல்லில் விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவிய அமைச்சர்

நாமக்கல்லில் விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல உதவிய அமைச்சர்

Update: 2022-09-11 16:34 GMT

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று ராசிபுரம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நாமக்கல்லுக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். நாமக்கல்- சேலம் சாலை முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிர்புறம் கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த அமைச்சர் காரில் இருந்து இறங்கினார். பின்னர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்தார். மேலும் மருத்துவ கல்லூரி முதல்வருடன் செல்போனில் பேசிய அவர், அவசர சிகிச்சை ஊர்தியில் வரும் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

விபத்தில் சிக்கிய நபருக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த அமைச்சரை அப்பகுதியில் உள்ளவர்கள் பாராட்டினர். விபத்தில் சிக்கிய நபர் நாமக்கல் பொன்நகர் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 48) என்பது தெரியவந்து உள்ளது. அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்