100 பேருக்கு பட்டா வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திருப்பத்தூர் அருகே 100 பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கினார்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வீடுகள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். விழாவில் 100 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக அவர் சமத்துவப்புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியச் சேர்மன் சண்முகவடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, பேரூராட்சிமன்றத் தலைவர்கள் கோகிலாராணி நாராயணன், பொசலான், ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், குன்றக்குடி சுப்பிரமணியன், வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.