புதிய டுவிட்டர் பக்கத்தை தொடங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கென புதிய டுவிட்டர் பக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.;

Update: 2023-04-09 11:38 GMT

சென்னை,

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அமைச்சரவைப் பட்டியலில் பல மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி 10 வது இடத்திலும் அவரது பெயர் இடம் பெற்றது.

இந்த நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கென புதிய டுவிட்டர் பக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

புதிதாக தொடங்கப்பட்ட டுவிட்டர் பதிவில்,

"இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்