திமுக இளைஞரணி பதவிகளுக்கு நேர்காணல் நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மாவட்ட, மாநகர பொறுப்புக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-01-24 19:11 GMT

சென்னை,

திமுக இளைஞரணியில் மாவட்ட, மாநகர பொறுப்புக்கான நேர்காணல் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 4500- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இதில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கி நடைபெற்றது. அடுத்தப்படியாக ஜனவரி 30 ம் தேதி திருவள்ளூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி,கடலூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்