மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு ஆய்வு செய்தார்.;
மதுரை,
மதுரை அழகர்கோவில் மலையில் உள்ள ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு அமைச்சர் சேகர்பாபு, கோவில் திருப்பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், அவர் கோவில் வளாகம் முழுவதும் சென்று பார்வையிட்டு, அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை பார்வையிட்ட அவர், அந்த பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.