குடமுழுக்கு பணிகளை விரைவில் தொடங்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் ேகாவிலில் குடமுழுக்கு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.;

Update: 2022-07-29 18:50 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் ேகாவிலில் குடமுழுக்கு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த தீர்த்தக்குளம், பெரியநாயகி அம்மன் ஆலயம் அருகில் உள்ள தீர்த்தக் கிணறு, மற்றும் வேதாரண்யேஸ்வரர் ஆலயம் அருகே உள்ள நந்தவனம் ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர், மற்றும் பெரியநாயகி அம்மன், நவக்கிரகங்கள் துர்க்கை அம்மன், பைரவர், மற்றும் சம்கார மூர்த்தி, உள்ளிட்ட தெய்வங்களை வணங்கினார்.

குடமுழுக்கு பணிகள்

மேலும் இந்த கோவிலில் குடமுழுக்கு பணிகள் எப்போது நடைபெற்றது என கோவில் செயல் அலுவலர் ராஜாவிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டார். இதைத்தொடர்ந்து குடமுழுக்கு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.ஆய்வின் போது அமைச்சருடன் மாரிமுத்து எம்.எல்.ஏ. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருப்பணிகள் இணை ஆணையர் மாரிமுத்து, நாகை இணை ஆணையர் ராமு, திருவாரூர் இணை ஆணையர் மணவழகன், திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில்

இதைப்போல திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மேலகோபுரம் விட்டவாசல் அருகில் உள்ள மனு நீதி சோழன் மண்டபம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு தொண்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் தியாகராஜர், கமலாம்பாள் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள நடைபாதையை முழுவதுமாக கற்களால் அமைக்க ரூ.5. கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கோவில் முழுவதும் மின்சார ஒளிபெறும் வகையில் ரூ.2 கோடி செலவில் திட்ட பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. மனுநீதி சோழன் கல்தேர் மண்டபத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் புனரமைப்புபணிகள் நடைபெற்றுவருகிறது. இந்து சமய அறநிலையத்துறையை பொருத்தவரையில் சிலைகள் மீட்பு குழு மூலம் 13 சிலைகள் மீட்டுள்ளோம். மேலும் வெளிநாட்டிலுள்ள சிலைகளை அடையாளம் காணப்பட்டு, அச்சிலைகளை மீட்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்