மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும் அதிகாரம் - வருகிற 28-ம் தொடங்கி வைக்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறையை வரும் 28-ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.;
சென்னை,
தமிழக பதிவுத்துறையில் மோசடி ஆவணப்பதிவு ரத்து செய்யும் அதிகாரம் நடைமுறையை வரும் 28-ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மோசடி பதிவுகளை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டத்திருத்த நடைமுறையை வரும் 28-ம் தேதி முதல் அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மோசடி பதிவுகளுக்கு தெரிந்தே துணை போகும் பதிவு அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரவும் இந்த சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட மோசடி பதிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய விசாரணைக்குப் பிறகு சொத்துக்கள் மீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.