முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
வன்னியன்விடுதியில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.;
ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் மாயன் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல் பண்டிகையைெயாட்டி 17-ந் ேததி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.