அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சாமி தரிசனம்

இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-09-07 17:42 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வந்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகிகள் பாலாஜி பட்டர், திருவேங்கடநாதன் பட்டர் ஆகியோர் பூரணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் பெருந்தேவி தாயாருக்கு மஞ்சள் மாலை சாத்தப்பட்டது. தொடர்ந்து வரதராஜ பெருமாள், சக்கரத்தாழ்வார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆண்டாள், நாச்சியார், லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆகிய சன்னதிகளில் அமைச்சர் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்