நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய சட்டப்பிரிவு பயிலரங்கத்தில் தூங்கிய அலுவலர் - கடிந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு
குடிசை வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்தக்கூடாது என அமைச்சர் கே.என்.நேரு வலியுறுத்தினார்.
சென்னை,
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான திருத்தப்பட்ட புதிய சட்டப்பிரிவு குறித்த பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த பயிலரங்கில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, குடிசை வீட்டில் இருப்பவர்களை பயமுறுத்தாமல், வியாபாரிகள், பணக்காரர்களிடம் சென்று வரிகளை வசூலிக்குமாறு வலியுறுத்தினார். மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்த போது அலுவலர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அதை கவனித்த அமைச்சர் கே.என்.நேரு, சட்டென பேச்சை நிறுத்தி தூங்கி அலுவலரை எழுப்பி விடுமாறு கூறினார். முக்கியமான நிகழ்வில் இவ்வாறு தூங்குவது நியாயமா? என அந்த அலுவலரை கடிந்து கொண்ட அமைச்சர், பின்னர் தன் பேச்சைத் தொடர்ந்தார்.