மத்திய அரசு வழங்கிய 'லீடர்' விருதை முதல்-அமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து
மத்திய அரசு வழங்கிய ‘லீடர்’ விருதை காண்பித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து பெற்றார்.
சென்னை:
டெல்லியில் கடந்த 4-ம் தேதி மத்திய அரசின் தொழில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு வணிகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தில் புத்தொழில் சூழமைவினை வலுப்படுத்தும் நோக்கில், புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுத்தற்காக, தமிழ்நாட்டிற்கு லீடர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாழ்த்து பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.