கனிமொழி எம்.பி.யிடம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்து
கனிமொழி எம்.பி.யிடம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்து பெற்றார்.;
உடன்குடி:
தி.மு.க., வில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டமாக கிளை, வார்டு, பேருர், ஒன்றிய தேர்தல் முடிந்து விட்டது. தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவிக்கு போட்டியிட, தற்போது பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர், மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியை தூத்தூக்குடியில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ., சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.