முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.
குலசேகன்பட்டினம்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை காலையில் குலேசகரன்பட்டினம் வருகை தந்தார். பின்னர் அவர் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று பய பக்தியுடன் சாமிதரிசனம் செய்தார். முன்னதாக அவரை கோவில் பட்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். சாமி தரிசனத்தை முடித்து கொண்ட அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார்.