போதைப்பொருட்கள் தடுப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி

குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.;

Update: 2022-08-11 17:58 GMT

குண்டடம் அரசு மாதிரி பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர்.

உறுதிமொழி ஏற்பு

குண்டடத்தை அடுத்துள்ள சேடபாளையம் அரசு மாதிரி பள்ளியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகள் முன்பு போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு பேசினார்கள்.

கடும் நடவடிக்கை

நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது:-

புகையிலை பொருட்கள் உபயோகிப்பதனால் வாய்ப்புற்று நோய் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகிறது.

மேலும் போதைப்பொருள் பதுக்கல் உள்ளிட்டவற்றை முற்றிலும் தடுத்து தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழையாமல் தடுப்பது, போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நாளை (இன்று) முதல் வருகிற 19-ந் தேதி வரை போதை பொருட்களுக்கான எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் தாராபுரம் ஆர்.டி.ஓ.குமரேசன், குண்டடம் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன் (மேற்கு), சிவசெந்தில்குமார் (கிழக்கு), ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்