ரூ.20¼ கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்

மடத்துக்குளம் பகுதியில் ரூ.20 கோடியே 26 லட்சம் செலவிலான குடிநீர்த் திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.;

Update: 2023-07-20 16:50 GMT

மடத்துக்குளம் பகுதியில் ரூ.20 கோடியே 26 லட்சம் செலவிலான குடிநீர்த் திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அம்ருத் 2.0 திட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் கொழுமம் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களுக்கும் குடிநீர் வழங்குவதை இலக்காகக்கொண்டு கடந்த 2021-ம் ஆண்டு அம்ருத் 2.0 திட்டம் தொடங்கப்பட்டது.

அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

அதன் ஒரு பகுதியாக தற்போது அம்ருத் 2.0 திட்டத்தில் மடத்துக்குளம் பேரூராட்சியில் ரூ.20 கோடியே 26 லட்சம் செலவில் குடிநீர் வினியோக மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து கொழுமம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ சார்பில் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 377 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ரா.ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றியச்செயலாளர் கே.ஈஸ்வரசாமி, கிழக்கு ஒன்றியச்செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, மடத்துக்குளம் ஒன்றியக் குழுத்தலைவர் காவியா அய்யப்பன், பேரூராட்சித் தலைவர்கள் கலைவாணி பாலமுரளி (மடத்துக்குளம்), ஷர்மிளாபானு (குமரலிங்கம்), மல்லிகா கருப்புசாமி (சங்கராமநல்லூர்) மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்