தூத்துக்குடி கனிமவள அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்

தூத்துக்குடி கனிமவள அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-07-24 18:01 GMT


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் என்ற சின்ன முத்து. இவர் கடந்த ஆண்டு ஆற்று மணல் கடத்தியதாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் அரசு வக்கீல் மீனாட்சி சுந்தரம் ஆஜராகி, மனுதாரர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுதொடர்பாக அவரிடம் இருந்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்து, அதுதொடர்பான விவரங்களை நீதிபதியிடம் அளித்தார்.

பின்னர் ஆஜரான மனுதாரர் வக்கீல், மனுதாரர் எதிர் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார். இதற்காக உரிய தொகையையும் செலுத்த தயாராக உள்ளார் என உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் ரூ.1 லட்சத்தை தூத்துக்குடி மாவட்ட கனிமவள அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை பெற்று, மாவட்ட கோர்ட்டில் சமர்ப்பித்து முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்