தண்ணீர் குழாயில் சிக்கிய மிளா

ஆரல்வாய்மொழி அருகே தண்ணீர் குழாயில் சிக்கிய மிளா

Update: 2023-01-30 20:39 GMT

ஆரல்வாய்மொழி,

கன்னியாகுமரி வனஉயிரின சரணாலய இஸ்ரோ (ஐ.எஸ்.ஆர்.ஓ) பகுதியில் தண்ணீர் குழாய் உள்ளே ஒரு மிளா குட்டி சிக்கி கொண்டது. இதைபார்த்த தாய் மிளா என்ன செய்வது என்று தெரியாமல் அருகிலேயே நின்றுகொண்டிருந்தது. இதை பார்த்தவர்கள் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின்படி உதவி வனபாதுகாவலர் சிவகுமார், பூதப்பாண்டி வனச்சரகர் ரவீந்திரன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்றனர். அவர்களுடன் இஸ்ரோ ஊழியர்கள், மத்திய தொழில் நுட்ப பாதுகாப்பு வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சேர்ந்து குழாயில் சிக்கி தவித்த மிளா குட்டியை மீட்டு அங்கு நின்று கொண்டிருந்த தாய் மிளாவிடம் அனுப்பி வைத்தனர். பின்னர் தாயும் குட்டியும் அங்கிருந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்