தமிழ்நாட்டில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது - அமைச்சர் மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கடன் வழங்கி பால் பண்ணை தொடங்க கூறி வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-11-08 17:07 GMT

சென்னை,

சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் ,

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி தொடர்ச்சியாக குறைந்து வருகிறது எனவும் , பால் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கடன் வழங்கி பால் பண்ணை தொடங்க கூறி வருகிறோம் என குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்தால் நிச்சயம் பால் கொள்முதல் அளவும் அதிகரிக்கும் எனவும் , 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆவின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்