பாலசுப்பிரமணியர் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்...!

நம்புதாளையில் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் பால்குட ஊர்வலம் நடந்தது.;

Update: 2023-06-02 18:45 GMT

தொண்டி, 

தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் நேற்று காலை அங்குள்ள நம்புஈஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் சுவாமி, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி, வேல் காவடி, பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்