சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பால்குட விழா

சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.

Update: 2023-05-06 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரியில் அமைந்துள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழாவையொட்டி சிங்கம்புணரி மேலூர் சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தும் விழா நடைபெற்றது. பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது. பின்னர் சாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோவில் முன்பு அன்னதானம் நடைபெற்றது. மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் திருத்தேரில் சிங்கம்புணரி முக்கிய வீதிகளில் சித்தர் முத்துவடுகநாதர் உற்சவமூர்த்தியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி வணிகர் நல சங்கம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்