தில்லைவிளாகத்தை அடுத்த ஜாம்புவானோடை தெற்கில் நாககாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.