மிலாடி நபி விழா பொதுக்கூட்டம்
கடையநல்லூரில் மிலாடி நபி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகர மீலாது கமிட்டி சார்பில் மீலாது விழா பொதுக்கூட்டம் காயிதேமில்லத் திடலில் மீலாது கமிட்டி தலைவர் செய்யது மசூது தலைமையில் நடைபெற்றது. முகம்மது முஸ்தபா ஆலிம் கிராக் ஓதினார். மிலாது கமிட்டி நெறியாளர் கமருதீன் வரவேற்றார். பொருளாளர் நல்லாசிரியர் அக்பர் அலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், நகர ஜமாத் உலமா சபை செயலாளர் இப்ராஹிம், மிலாது கமிட்டி செயலாளர் குத்துப்தீன், தென்காசி மாவட்ட அரசு காழி முகைதீன் யூசுப் அன்சாரி ஆகியோர் பேசினர். இறுதியில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹாஜா முயீனுத்தீன் ஆலிம் சிறப்புரை ஆற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உட் பட பலர் பங்கேற்றனர். முடிவில் மிலாது கமிட்டி துணை தலைவர்அப்துல்மஜீத் ஆலிம் நன்றி கூறினார்