கம்பி வேலியில் சிக்கிய மிளா மீட்பு
முக்கூடல் அருகே கம்பி வேலியில் சிக்கிய மிளா மீட்கப்பட்டது.;
முக்கூடல்:
நெல்லையில் இருந்து முக்கூடல் செல்லும் மெயின்ரோட்டில் அரசன்குளம் அருகில் நாய்களால் விரட்டப்பட்ட மிளா ஒன்று கம்பி வேலியில் சிக்கிக்கொண்டது. அங்கிருந்து அந்த மிளாவால் மீண்டு வர முடியவில்லை. இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது மிளாவை விரட்டி வந்த நாய்கள் அங்கிருந்து ஓடி விட்டன. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பை வனத்துறையினர் அங்கு வந்து வேலியில் சிக்கிய மிளாவை மீட்டுச்சென்றனர்.