குறு மைய விளையாட்டு போட்டி

குறு மைய விளையாட்டு போட்டி;

Update: 2023-08-18 20:30 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பொள்ளாச்சி மேற்கு குறு மைய விளையாட்டு போட்டிகள், அக்சயா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 56 பள்ளிகளில் இருந்து 570 மாணவர்கள், 340 மாணவிகள் என மொத்தம் 910 பேர் கலந்துகொண்டு விளையாடினர். 14 வயது முதல் 19 வயது வரை 3 பிரிவுகளில் கபடி, கைப்பந்து, பூப்பந்து, கோகோ, டேபிள் டென்னிஸ், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம்(செப்டம்பர்) கோவையில் நடைபெறும் மாவட்ட போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டு போட்டிகளை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், ஜோதி, மணிமேகலை ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்