எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரியகுளத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.;
தேனி வடக்கு மாவட்டம் மற்றும் பெரியகுளம் நகர அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. இதற்கு நகர செயலாளர் ஆர்.செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜெ.சலீம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் குபேந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி செல்வம், நகர இணைச் செயலாளர் சையது அபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் சின்னன் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் டாக்டர் கதிர்காமு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், பால்பாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் அறிவுக்கொடி ரத்தினவேல், மாவட்ட துணை செயலாளர்கள் சிந்து, பாலச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.