மேட்டு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா

கோவிந்தபேரி மேட்டு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்தது.;

Update: 2022-09-24 18:45 GMT

ஆலங்குளம்:

சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரி மேட்டு சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் குடியழைப்பு, சிறப்பு தீபாராதனை நடந்தது. 2-ம் நாள் காலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியக்கொடை நடைபெற்றது. மாலையில் சிறப்பு புஷ்ப அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவில் சாமக்கொடை, படைப்பு பூஜை நடைபெற்றது.

விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் சிவலிங்கமுத்து (நெல்லை புறநகர்), கணபதி (தென்காசி தெற்கு), மூர்த்தி பாண்டியன் (தென்காசி வடக்கு) உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்