மேட்டூரில் இருந்து ஈரோட்டுக்கு பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கம்

மேட்டூரில் இருந்து ஈரோட்டுக்கு பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.;

Update: 2022-07-11 20:27 GMT

மேட்டூர்,

மேட்டூரில் இருந்து ஈரோட்டிற்கு சேலம் வழியாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு முன்னதாக இந்த ெரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் எம்.பி., சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோரது முயற்சியால் மேட்டூரில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று முதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த பயணிகள் ரெயிலை சதாசிவம் எம்.எல்.ஏ. மலர் தூவி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் ரெயில்வே அதிகாரிகள், மேட்டூர் பா.ம.க. நகர செயலாளர் மதியழகன், பி.என்.பட்டி பேரூர் செயலாளர் குமார், முனுசாமி, சந்தோஷ், அருண்குமார், பா.ஜனதா நிர்வாகிகள் மகேஷ்வரி, சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரெயிலில் வந்த பயணிகளுக்கு சதாசிவம் எம்.எல்.ஏ. இனிப்பு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்