மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியாக சரிவு...!
உபரி நீர் திறக்கப்படாததால் ஒகேனக்கலில் நீர்வரத்து சரிந்தது.
மேட்டூர்,
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
2 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்படாததால் ஒகேனக்கலில் நீர்வரத்து சரிந்தது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 102.99 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1260 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.