மெட்ரோ ரெயில் பார்க்கிங் கட்டணம் நாளை முதல் உயர்வு..!

மெட்ரோ ரெயிலில் பயணம் செல்லாமல் பார்க்கிங் மட்டும் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2023-06-13 02:52 GMT

சென்னை,

சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி (நாளை) முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று மின்சார ரெயில் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்