மோட்டார் சைக்கிள் விபத்தில் மேஸ்திரி சாவு
ஆம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மேஸ்திரி உயிரிழந்தார்.
ஆம்பூரை அடுத்த சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.