வளர் இளம் பெண்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி
வளர் இளம் பெண்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தா.பழூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் தமயந்தி வரவேற்று பேசினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி வளர் இளம் பருவத்தில் பெண்கள் உண்ணக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் பற்றியும், அதன் முக்கியத்துவம் குறித்தும், ரத்த சோகை அறிகுறிகள் மற்றும் ரத்த சோகை நோய் தாக்குதல் இல்லாமல் வாழும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.தட்சிணாமூர்த்தி நுண்ணூட்ட சத்து நிறைந்த உணவுகள் மற்றும் மருத்துவம் குறித்து விளக்கி பேசினார்.சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கரீம் யோகா பயிற்சி அளித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலகு வீரமணி வளர் இளம் பெண்கள் சட்டபூர்வமான பாதுகாப்புகள் குறித்து விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார திட்ட உதவியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் சிறுதானிய உணவுகள் கீரைகள் போன்றவை குறைத்த கண்காட்சி அமைத்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கினர்.