உறுப்பினர் விழிப்புணர்வு முகாம்

ஆறுபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-09-25 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக ஆறுபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. விழாவில் சங்கத்தின் செயலாட்சியர் குணபாலன், சங்கத்தின் கள அலுவலர் வெங்கடேஸ்வரன், கூட்டுறவு சார்பதிவாளர், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் அமீருதீன், சங்க செயலாளர் பொறுப்பு முகமது அசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு முகாமில் உறுப்பினர்கள் சங்கத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் சங்கத்தின் நகை கடன், விவசாய பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன் போன்ற கடன்களுக்கான விபரங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 64 சங்கங்களிலும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறுமாறு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ் மற்றும் துணைப் பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்