மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தை காணவில்லை? என கிராம மக்கள் புகார்

மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தை காணவில்லை? என கிராம மக்கள் யூனியன் ஆணையாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.;

Update:2023-04-18 00:15 IST

திருச்செந்தூர்:

மேல திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட நா.முத்தையாபுரம், கீழநாலுமூலைகிணறு கிராம பொதுமக்கள் திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று முன்தினம் (16-ந் தேதி) முதல் காணவில்லை. இது குறித்து வார்டு உறுப்பினர்களிடம் கேட்டதற்கு தெரியாது என கூறிவிட்டனர். எனவே, அந்த பஞ்சாயத்து அலுவலகத்தை கண்டுபிடித்து தர வேண்டும். புதிய பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றை மேலத்திருச்செந்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர்-பரமன்குறிச்சி ரோட்டில் உள்ள பூங்கா அருகே அனைத்து தரப்பினருக்கும் பொதுவான இடத்தில் அமைத்து தர வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்