மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு வைகோ கடும் கண்டனம்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு வைகோ கடும் கண்டனம்.;

Update: 2023-07-24 18:42 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காணுவதற்கும், அகற்றப்பட வேண்டிய மரங்களை கணக்கீடு செய்வதற்கும், கர்நாடக வனத்துறை சார்பில் 29 துணை வன அதிகாரிகளை நியமித்து, கூடுதல் முதன்மை தலைமை வனக் காப்பாளர் அனில்குமார் ரதன் உத்தரவு பிறப்பித்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறியும், தமிழ்நாட்டின் மரபு உரிமையை மீறியும் மேகதாது அணை கட்டுமானப் பணியை கர்நாடக அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகதாது அணை வழக்கை துரிதப் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் ஆகியோரின் படங்கள் மட்டும் வைக்க வேண்டும் என்ற ஆணையை ஐகோர்ட்டு பதிவாளர் திரும்ப பெற்று, இதில் அம்பேத்கரின் உருவப்படமும் இடம் பெற அனுமதிக்க வேண்டும் என்று வைகோ மற்றொரு அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்