ஆதிதிராவிடர் அலுவலர்களின் கோரிக்கைகள் கேட்பு கூட்டம்
ஆதிதிராவிடர் அலுவலர்களின் கோரிக்கைகள் கேட்பு கூட்டம் 10-ந் தேதி நடக்கிறது
விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் இட ஒதுக்கீடு விதிப்படி நியமனம் செய்தல் மற்றும் பங்கேற்பு ஆகியவற்றை கண்காணிக்கவும் உறுதி செய்யவும் நடத்தப்படும் கூட்டமானது வருகிற 10-ந் தேதி மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அரசு துறையில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்கள் பணி புரியும் இடங்களில் உள்ள கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தனியார் அல்லது பணியாளர் அமைப்புகளின் முறையீடுகள் ஆகியவற்றையும் நேரடியாக மனுவாக அளித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.