மருத்துவ திட்டப்பணிகள் குறித்த கூட்டம்

மருத்துவ திட்டப்பணிகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-18 19:06 GMT

 கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், கரூர் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்து அவற்றில் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் கவனிக்கப்பட வேண்டும். தேசிய தரக்கட்டுப்பாடு சான்றிதழ் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் பெற அதற்குண்டான பணிகளை துரிதமாக எடுக்க வேண்டும், என்றார். பின்னர் தங்க தந்தை திட்டத்தினை ஊக்குவித்து குடும்ப நல அறுவை சிகிச்சையினை அதிகரிக்க செய்தமைக்காக 3 சுகாதார அலுவலர்களுக்கும், ஒரு செவிலியருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்