தூத்துக்குடியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம்
தூத்துக்குடியில் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.;
தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்த ஆண்டு அதிகப்படியான விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, கரைப்பதற்கு எடுத்து செல்வது, 24.9.23 அன்று நடைபெறும் ஊர்வலத்தில் மாவட்ட தலைவரின் அனுமதி பெற்ற பின்னர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தூத்துக்குடி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.