காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு

சுரண்டையில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.;

Update: 2023-09-24 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுரண்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், ஆலங்குளம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை வரவேற்றார்.

கூட்டத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. பேசுகையில், "வரும் அக்டோபர் மாதம் 8-ந் தேதி தென்காசி மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிவகாசியில் நடக்கிறது. இதில் அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 40 இடங்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் சமுத்திரம், மணி, முகமது உசேன், சிவராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், பொதுச் செயலாளர்கள், காஜா மைதீன், பரமசிவன், பட்டுமுத்து தெய்வேந்திரன், செயலாளர்கள் அலெக்சாண்டர், செல்லப்பா, நகர தலைவர்கள் கடையநல்லூர் முகமது அபுதாகீர், புளியங்குடி பால்ராஜ், சங்கரன்கோவில் உமா சங்கர், செங்கோட்டை ராமர், சுரண்டை ஜெயபால், தென்காசி ஜோதிடர் மாடசாமி, வட்டார தலைவர்கள் கணேசன், எட்வர்ட் ரூபன் தேவதாஸ், மாணிக்கம், அருணாசலம் என்ற அழகுதுரை, ராமர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்