மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம்
மே தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மே தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கிராமசபை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருஉத்தரகோசமங்கை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு பங்கேற்று பேசினார். இதில், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம், திருப்புல்லாணி யூனியன் ஆணையாளர்கள் ராஜேந்திரன், கணேஷ் பாபு, திருஉத்தரகோசமங்கை ஊராட்சி தலைவர் கருங்கம்மாள் முத்து, துணைத்தலைவர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாரியூர் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள் சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன், சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், சாயல்குடி காங்கிரஸ் வட்டார தலைவர் அப்துல் சத்தார், முன்னாள் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் நவாஸ் கனி எம்.பி. பங்கேற்று பேசினார். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பெரோஸ் பானு ஜலில், வசந்தா கதிரேசன், திமுக கிளைச் செயலாளர் கள், காசிதங்கவேல், ஜமால், குருசாமி, ஸ்டாலின் சிங், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சாயல்குடி சுற்று வட்டார கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
திருவாடானை, கமுதி
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பற்றாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபை கூட்டங்களை மண்டல அலுவலர் ரகு வீர கணபதி, திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கமுதி அருகே பாக்குவெட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் கிராமத்தில், நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் நிறைபாண்டியன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ராஜேஸ்வரிகதிரேசன், ஊராட்சி செயலர் வேல்முருகன், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கநல்லூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் காவடிமுருகன் தலைமையிலும், கீழராமநதியில் ஊராட்சி தலைவர் பழனிஅழகர்சாமி தலைமையிலும், தலைவநாயக்கன்பட்டியில் ஊராட்சி தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமையிலும் கூட்டம் நடந்தது.
கிராம மக்கள் புறக்கணிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் முகமது உமர் பார்க் தலைமை தாங்கினார். யூனியன் மேற்பார்வையாளர் முருகன் முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி செயலர் கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் 1.4.2022 முதல் 31.3.2023 வரை பொதுநிதியிலிருந்து ரூ.39 லட்சத்தி 90 ஆயிரத்து 322 செலவு கணக்கு காண்பிக்கப்பட்டது.
அப்போது பொதுமக்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
செலவு மட்டும் இவ்வளவு தொகை கணக்கு காட்டப்படுகிறது என கேள்வி எழுப்பினர். மேலும், இனிவரும் கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றால் மட்டுமே கலந்துகொள்வோம் எனக்கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.