பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
கபிலக்குறிச்சி, வடகரையாத்தூர்
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கபிலக்குறிச்சி ஊராட்சி சார்பில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குணவதி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். பெரியசோளிபாளையம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் யமுனா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
வடகரையாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைவாணி சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பொன்னுவேல் வரவேற்றார். பிலிக்கல்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சாமிநாதன் வரவேற்றார். சேளூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ரோகிணி சதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
கொந்தளம், கோப்பணம்பாளையம்
கொந்தளம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மணிமேகலை பாலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் விஜயகுமார் வரவேற்றார். கோப்பணம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.
இருக்கூர் மாணிக்கநத்தம்
இருக்கூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஜானகி குழந்தைவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரவி வரவேற்றார். கொத்தமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாணிக்கம்நத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் உதயகுமார் வரவேற்றார். மேற்கண்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் கிராம நிர்வாகம், பொது நிதி குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியில் தணிக்கை அறிக்கை சமர்ப்பித்தல், டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.