கிராம சபை கூட்டம்

திம்ஜேப்பள்ளி, ஒன்னல்வாடி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2023-01-27 18:45 GMT

திம்ஜேப்பள்ளி, ஒன்னல்வாடி ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது.

கிராம சபை கூட்டம்

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சியில் குடியரசு தின விழாவையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. உள்ளுகுறுக்கை கிராமத்தில் கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஈஸ்வரி முத்தன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு பார்வையாளர்களாக டெல்லி தேசிய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சலீம்குமார், தவமணி ஆகியோர் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டனர். கூட்டத்தில் ஊராட்சியில் செயல்படுத்தபட வேண்டிய பணிகள், ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு குறித்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது, டெங்கு காய்சல் தடுப்பு என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் வாசித்து நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, உதவி திட்ட அலுவலர்கள் செல்வகுமார், ஷகிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தலட்சுமி, சென்னகிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை தனி தாசில்தார் மேகன்தாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுரேகா கோவிந்தராஜ், வார்டு உறுப்புனர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்படுகளை ஊராட்சி செயலாளர் விவேகனந்தா செய்திருந்தார். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தலைவர் ஈஸ்வரி முத்தன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

ஒன்னல்வாடி ஊராட்சி

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்னல்வாடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஜொனபண்டா கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில், ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் சீனிவாஸ், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்