ராஜபாளையம் நகராட்சி கூட்டம்

ராஜபாளையம் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.;

Update: 2023-01-12 18:45 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. துணை தலைவர் கல்பனா குழந்தைவேல், ஆணையாளர் பார்த்தசாரதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சொத்து வரியை குறைப்பதற்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் 17-வது வார்டு கவுன்சிலர் ஜெகதீஸ்வரி தன்னுடைய வார்டில் குடிநீர் 15 நாட்களாக வழங்கப்படவில்லை எனவும், குடிநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் முறையாக கிடைத்து கொண்டிருந்த குடிநீர், பதவிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் வரியையும் கூட்டிய நிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் தன்னிடம் குறை கூறுவதாகவும் கூறினார்.

இதற்கு பதில் அளித்த தலைவர், அனைத்து வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து கவுன்சிலர்களின் தகவல் அறிந்து விரைந்து நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் பதவி ஏற்றது முதல் ஒவ்வொரு கவுன்சிலர்கள் 4 முறை பொதுமக்கள் பிரச்சினைக்காக மனு கொடுத்ததாக கூறினார்கள். இதற்கு ஆணையாளர் எந்த மனுவுக்கு தாங்கள் பதிலளித்து குறைகளை நிவர்த்தி செய்து உள்ளீர்கள் என இம்மாத இறுதிக்குள் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்