மாணிக்கநத்தம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

Update: 2022-11-30 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மாணிக்கநத்தம் ஊராட்சி சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் உதயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2023-2024-ம் நிதி ஆண்டு வேலைக்கான பணிகள் தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இதில் மாணிக்கம்நத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்