விவசாய சங்க ஒன்றிய குழு கூட்டம்
தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய குழு கூட்டம் திருப்புவனம் பழையூரில் நடைபெற்றது.;
திருப்புவனம்,
தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய குழு கூட்டம் திருப்புவனம் பழையூரில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டியன், துணை தலைவர் ஜெயராமன் ஆகியோர் பேசினார்கள். ஒன்றிய பொருளாளர் நீலமேகம், பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருப்புவனம், நயினார்பேட்டை, அ.வெள்ளக்கரை பகுதிகளில் உள்ள பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக வாடியாமல் இருப்பதால் அனைத்து பயிர்களும் அழுகும் நிலையில் உள்ளது. வேளாண்மை துறை அலுவலர்கள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். திருப்புவனம் விவசாயிகளுக்கு அனைத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் உரங்கள் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். தனியார் உரக்கடையில் யூரியா போன்ற உரங்கள் வாங்கும்போது வேறு உரங்களையும் வாங்க சொல்லி விவசாயிகளை கட்டாயப்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் கண்டிக்க வேண்டும். திருப்புவனம் பகுதிகளில் கண்மாய்கள், வடிகால் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.